மலேசிய கடல்சார் அமலாக்க முகமைக்கு (Malaysian Maritime Enforcement Agency) சொந்தமான முதல் கடல் ரோந்துக் கப்பலின் (Offshore Patrol Vessel1) கட்டுமானம், அசல் உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது.
கப்பலின் கட்டுமானம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, திட்டத்தின் முன்னேற்றத்தை அவரும் அவரது துணை அதிகாரி ஷம்சுல் அனுவர் நசராவும் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்று அதன் அமைச்சர் சைபுடின் நசுஷன் கூறினார்.
“இருப்பினும், உண்மையைச் சொல்வதானால், மார்ச் மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு இன்னும் நேரம் தேவை என்று நான் நினைக்கிறேன் (ஓபிவி 1 நிறைவடையும் தேதி), ஆனால் நீண்ட காலம் அல்ல; இந்த ஆண்டுக்குள் அது இருக்க வேண்டும்”.
“நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதால் ஒப்படைப்பு தேதியை மாற்றவோ அல்லது நீண்ட காலத்திற்கு நீட்டிக்கவோ கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நான் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளேன்,” என்று அவர் இன்று புலாவ் இந்தாவில் OPV 1 கப்பலின் கட்டுமானத்தை ஆய்வு செய்தபின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கு முன்னர், MMEAவின் OPV1 திட்டம் இந்த ஆண்டு நிறைவடையும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் 152.6 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்கியதாகவும், இந்தத் திட்டம் இப்போது நிதி அமைச்சகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கூடுதல் நிதி, குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டத்தை முடிக்க உதவும் என்றார் சைபுதீன்.
“முக்கிய கூறுகள் அனைத்தும் நிறுவப்பட்டுள்ளன, பணம் செலுத்தும் அம்சம் காரணமாக அனைத்தும் முடங்கியுள்ளன”.
இதற்கிடையில், ஓபிவி 2 கப்பலின் கட்டுமானப் பணிகள் அக்டோபரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சைபுடின் கூறினார்.