நேற்றிரவு செம்போர்னாவில் மானிய விலையில் சமையல் எண்ணெய் தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்காததற்கு லஞ்சம் கேட்ட சந்தேகத்தின் பேரில், MACC ஆல் கைது செய்யப்பட்ட ஆறுபேரில் ஐந்து அரசு ஊழியர்களும் அடங்குவர்.
கடத்தல் நோக்கங்களுக்காக 100 பெட்டிகள் மானிய விலையில் சமையல் எண்ணெயைச் சேமித்து வைத்திருந்த அவரது மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்காக, ஒரு தனிநபரிடமிருந்து 20,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக நம்பப்படுவதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.
“29 முதல் 50 வயதுடைய ஆறு சந்தேக நபர்கள், அந்த நபரிடமிருந்து 5,000 ரிங்கிட் லஞ்சத்தின் ஒரு பகுதியைப் பெற்றதனால் இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டனர்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
இதற்கிடையில், சபா MACC இயக்குனர் எஸ்.கருணாநிதியைத் தொடர்பு கொண்டபோது, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதோடு, MACC சட்டம் 2009 இன் பிரிவு 17 (a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியல் விண்ணப்பத்திற்காக இன்று தவா செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என்று அவர் கூறினார்.