இந்தியர்களுக்கான சிறப்பு அதிகாரி ரமேஷ் ராவ் காலமானார்

துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி நியமித்த இந்திய சமூகம்  விவகாரங்களுக்குப் சிறப்பு அதிகாரி ரமேஷ் ராவ் காலமானார். அவருக்கு வயது 52.

இன்று காலை அவர் காலமானதாக பெர்னாமா டிவி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ரமேஷ் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது மறைவை துணைப் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

ரமேஷின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த ஜாஹித், சமூகத்திற்கும் நாட்டிற்கும் ரமேஷ் செய்த சேவையைப் பாராட்டினார்.

“சோகம் மற்றும் துக்க உணர்வுகளுடன், நானும் துணைப் பிரதமர் அலுவலகம் மற்றும் ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சகத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று அதிகாலை இறந்த ரமேஷ் ராவின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

“இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், அறிமுகமானவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தங்கள் அன்புக்குரியவரின் இழப்பில் ஆறுதலையும் வலிமையையும் பெறட்டும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Pertubuhan Minda dan Sosial Prihatin NGO தலைவராக இருந்த ரமேஷ், கடந்த மாதம் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார்.