சபாவில் முதன்முறையாக முழு உணர்வுள்ள நோயாளிக்கு மூளை அறுவை சிகிச்சை

முழு சுயநினைவுடன் கூடிய நோயாளிக்கு முதல் மூளை அறுவை சிகிச்சை சபாவில் மேற்கொள்ளப்பட்டது.

வியாழக்கிழமை மலேசியா சபா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோத்தா  கினாபாலுவில் உள்ள குயின் எலிசபெத் 2 மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என்று சபா சுகாதார இயக்குனர் டாக்டர் ரோஸ் நானி முடின் தெரிவித்தார்.

நோயாளி 50 வயதுடைய பெண், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தலைவலியால் அவதிப்பட்டு  வந்தார்.

அவரது மூளையின் இடது பக்கத்தில் ‘மல்டிபிள் மெனிங்கியோமா’ இருப்பது கண்டறியப்பட்டது, நவம்பர் மாதம் முதல் மருத்துவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர்.

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் எம் சோஃபான் ஜெனியன் மற்றும் டாக்டர் ஹெஸ்ரி அபு ஹசன், நரம்பியல் அறுவை சிகிச்சை மயக்கவியல் நிபுணர் டாக்டர் யீப் பூன் டாட் மற்றும் சுங்கை பூலோ மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லியூ பூன் செங் ஆகியோர் அடங்கிய குழுவால் விழித்திருக்கும் கிரானியோட்டமி நடத்தப்பட்டது.

நோயாளி சிறந்த வாழ்க்கைத் தரத்தை வாழ உதவுவதற்காக இந்த நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது, என்று ரோஸ் கூறினார்.

இந்த செயல்முறை 2000 களின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 2010 முதல் யுனிவர்சிட்டி சயின்ஸ் மலேசியா மருத்துவமனை, கோலாலம்பூர் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் சுல்தானா அமினா மருத்துவமனை ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட்டு வருகிறது.

-FMT