காணாமல் போன சரக்குக் கப்பல் பணியாளர்களின் குடும்பம் பதில்களைக் கோருகிறது

காணாமல் போன சரக்குக் கப்பலான MV Dai Cat 06-இன் பணியாளர் உறுப்பினரான 22 வயதான டெரன்ட் லிட்டர்(Derrent Littor), தனது 28 வயது சகோதரி லில்லியிடம், “நாங்கள் லைஃப் ஜாக்கெட் அணிந்து தூங்குகிறோம்,” என்று கூறினார்.

அக்டோபர் 28 ஆம் தேதி கப்பலில் மாலுமியாகப் பணிபுரியத் தொடங்கிய தனது இளைய சகோதரர், ஜனவரி 9 ஆம் தேதி காணாமல் போகும் முன் கப்பலில் சரக்குகளை ஏற்றத் தொடங்கியபோது தனது கவலையை வெளிப்படுத்தினார்.

கப்பலின் உரிமையாளர், முகவர் மற்றும் சரக்கு உரிமையாளர் ஆகியோர் கப்பலின் நிலையைத் தங்களுக்கும் அதிகாரிகளுக்கும் விளக்க முன்வர வேண்டும் என்றும், கப்பலைத் தேடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் லில்லியும் அவரது குடும்பத்தினரும் வலியுறுத்தினர்.

“மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (Malaysian Maritime Enforcement Agency) மற்றும் கடல்சார் துறை போன்ற அதிகாரிகள் குடும்பத்திற்கு தகவல்களை வழங்கியிருந்தனர், ஆனால் கப்பல் உரிமையாளர்கள், முகவர்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளும்போது ஒத்துழைக்க விரும்பவில்லை”.

“இந்தத் தேடுதல் நடவடிக்கையில் கவனம் செலுத்துமாறும், அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்குமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கும் ஐந்து பேரின் குடும்பங்களும் அழ்ந்த துயரத்தில் உள்ளது,” என்று அவர் இன்று கோத்தா கினபாலுவுக்கு அருகில் உள்ள கம்போங் மெலவாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஜனவரி 9 ஆம் தேதி, 527 குழாய்களை ஏற்றிச் சென்ற மலேசியப் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல், இந்தோனேசிய கடற்பகுதியில் ரிங்கிட் 726,205 மதிப்பிலானது காணாமல் போனதாகக் கூறப்பட்டு, அதே நாளில் கப்பலின் முகவரால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

டெரண்டைத் தவிர, காணாமல் போன இரண்டு மலேசிய குழு உறுப்பினர்கள் மூத்த அதிகாரி முகமட் சியாஃபரிசான் முகமட் நூர்(Mohammad Syafarizan Mohd Noor) 24; மாலுமி, முகமது சுதே சுதின்(Mohammad Sudeh Sudin),20; ஷிப் மாஸ்டர் ஆதி(Adi), 43, மற்றும் தலைமை பொறியாளர் தமாய் பாபனே ஓலே(Damai Papane Ole) 57, இருவரும் இந்தோனேசியர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

கடைசியாக ஜனவரி 1 அன்று கப்பல் சிங்கப்பூருக்கு அருகில் இருந்தபோது தான் தனது சகோதரரைத் தொடர்பு கொள்ள முடிந்தது என்று லில்லி கூறினார்.

“மதியம் 1.45 மணிக்கு, அவர் சிங்கப்பூரில் ரோமிங் லைன் வாங்கியதாக என்னிடம் கூறினார், மதியம் 2 மணிக்கு, நாங்கள் வீடியோ அழைப்பை மேற்கொண்டோம், ஆனால் அதன் பிறகு, மாலை 5 மணிக்கு, நான் ஒரு செய்தியை அனுப்பினேன், ஆனால் எந்தப் பதிலும் இல்லை. இன்று வரை அவரது எண்ணை அழைக்க முயற்சித்தேன், ஆனால் எந்தப் பதிலும் இல்லை,” என்று அவர் கூறினார்.

டெரண்ட் கப்பலைப் பற்றிச் சில கவலைகளை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தனது கடமைகளைத் தொடர்ந்ததாகவும், இது இந்த ஆண்டு ஏப்ரலில் காலாவதியாகிறது என்றும் அவர் கூறினார்.

கப்பல் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது, குறிப்பாக அதன் மின் அமைப்பு மற்றும் நீர் பம்ப் ஆகியவை இப்போது அவர்களைக் கவலையடையச் செய்கின்றன என்றும் அவர் கூறினார்.

“டெரண்ட் ஒரு மாலுமியாகத் தனது வாழ்க்கையைத் தொடர இந்த வேலையை எடுத்தார் மற்றும் அனுபவத்தைப் பெற விரும்பினார். இந்த வழக்கை அலட்சியப்படுத்தாமல், அதை ஆராய்ந்து இந்தக் குழுவினரை வீட்டிற்கு அழைத்து வர உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.