தலைமை ஆசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து 109,000 ரிங்கிட் திருட்டு

தலைமையாசிரியர் உணவகத்திற்கு பானம் வாங்கச் சென்றபோது, அவரது காரின் முன் பயணிகள் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த 109,000 ரிங்கிட் பணத்துடன் ஒரு திருடன் தப்பிச் சென்றான்.

அவரது பள்ளிக்கு வழங்கப்பட்ட நிதியுதவி பணம், தலைமை ஆசிரியரால் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. அவர் பானம் வாங்க செமனியில் உள்ள ஒரு  கடைக்கு சென்றபோது அந்தப்பணம் அவரது காரின் முன் பயணி இருக்கையில்   வைக்கப்பட்டிருந்தது.

காஜாங் காவல்துறைத் தலைவர் ஜெய்த் ஹாசன் கூறுகையில், 50 வயதான தலைமை ஆசிரியரிடம் இருந்து மதியம் 12.17 மணிக்கு சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்றார்.

பாதிக்கப்பட்டவர் காலை 10 மணியளவில் கம்போங் பாரு செமனியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பணத்தை  பெற்று, பணத்தை ஒரு பையில் வைத்துள்ளார் என்பது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று நேற்று இரவு அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் செமனியில் உள்ள ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்தவர்.

போலீசார் திருடனைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 379 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜெய்த் கூறினார். மேலும் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

-FMT