நாட்டு மக்களிடையே இனவாத பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது – ஜாஹிட்

இன மற்றும் கலாசார வேறுபாடுகள் இந்த நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தக் கூடாது, மாறாக அவை மக்களை ஒன்றிணைப்பதில் முக்கியமான கூறுகளாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் துணை பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி.

மலேசியாவில் பல இனங்கள் உள்ளன என்பதை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ், நாங்கள் அனைத்து இனங்கள் மற்றும் கலாச்சாரங்களை சென்றடைய விரும்புகிறோம். இதன் மூலம், ஒன்றுபட்ட மலேசிய தேசத்தின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாடலாம்.

ஊத்தான் லிண்டாங்கில் இன்று சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவர் தனது உரையில், கலாச்சார புரிதல் மூலம் ஒற்றுமை உணர்வை உருவாக்க வேண்டும்.

பகான் டத்தோ எம்.பி.யுமான ஜாஹிட், ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்க அனைத்து இனங்களும் வெவ்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் மொழிகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

 

-FMT