HIV தொற்றைத் தடுக்கும் நோக்கில் மருந்துகளை வழங்குவதற்கான அரசாங்க நடவடிக்கைகள்குறித்த எந்தவொரு முடிவும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது.
அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு ப்ரீ-எக்ஸ்போசர் நோய்த்தடுப்பு (Pre-Exposure Prophylaxis) பொது இலவச விநியோகம் குறித்த சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு மத்தியில், சிலதரப்பிணர் அதை LGBT என்ற ஓரிண உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக் கூடாது என்று மதவாதிகள் போராடுகின்றனர்.
” PrEP பயன்பாடுகுறித்த மதக் கண்ணோட்டம் கொண்டவர்கள் மத்தியில், அதிக ஆபத்தில் உள்ளவர்களைப் PrEPக்கு அனுமதிப்பதன் ஒரே நோக்கம் மக்களிடையே HIV பரவுவதைத் தடுப்பதும் உயிர்களைக் காப்பாற்றுவதும் ஆகும்,” என்று MMA தலைவர் டாக்டர் முருக ராஜ் ராஜதுரை இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“HIV நோய்த்தொற்றுகளைத் தடுப்பதே PrEP இன் நோக்கம் மற்றும் சமூகத்திற்கு சிறந்த விளைவுகளை அடைய அதிக ஆபத்துள்ள குழுக்களை அணுக அனுமதிக்கும் முடிவு அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் ஒரு முடிவாக இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
பாலியல் மூலம் HIV பரவுவதைத் தடுப்பதில் PrEP 99% செயல்திறன் விகிதத்தையும், ஊசிமூலம் பரவுவதைத் தடுப்பதில் 74% செயல்திறனையும் கொண்டுள்ளது.
இது பாதிக்கப்பட்ட நபரின் உடலில் வைரஸ் சுமையைக் குறைக்கிறது, அதனால் அவர்கள் அதைப் பாலினம் அல்லது ஊசிமூலம் பரவுவதை வெகுவாக குறைக்க முடியும்,
HIV, காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிராகச் செயல்படும் சர்வதேச அமைப்பான குளோபல் ஃபண்ட் நிதி இரண்டு ஆண்டு பைலட் ஆய்வின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பொது கிளினிக்குகளில் பாதிக்கப்பட்ட குழுக்களுக்குச் சுகாதார அமைச்சகம் இலவசமாக வழங்குகிறது.
சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜொகூர், பினாங்கு மற்றும் சபாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொது கிளினிக்குகளில் இது 10,000 பேரைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது மலேசியாவில் HIV பரவுதல் பாலியல் உறவால்தான்.
2030 ஆம் ஆண்டில் மலேசியாவில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களாக இருப்பார்கள் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள கணிப்புகள் தெரிவிக்கின்றன.
MMA தலைவர் டாக்டர் முருகராஜ் ராஜதுரை
கடந்த வாரம், சிலாங்கூர் இஸ்லாமிய முஃப்தி துறை, “ஓரினச்சேர்க்கை வாழ்க்கைமுறையில்” ஈடுபடுபவர்களுக்கு PrEP வழங்குவது பாவத்திற்கு உடந்தையாக இருப்பதிற்கு சமம், என்று வாதிட்டது.
முன்னதாக, முஸ்லீம் சுகாதார வல்லுநர்கள் குழு, ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் உட்பட இலக்குக் குழுக்களுக்கு இலவசமாக PrEP ஐ வழங்குவதற்கான சுகாதார அமைச்சகத்தின் நடவடிக்கை அவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்றும் கூறியது.
எவ்வாறாயினும், எச்.ஐ.வி நோய்த்தொற்றின் அதிக ஆபத்தில் உள்ள குழுக்களுக்கு நோய் பரவுவதை திறம்பட தடுக்கவும் கட்டுப்படுத்தவும் PrEP க்கு அணுகல் வழங்கப்படுவது முக்கியம் என்று முருகா வாதிட்டார்.
எச்.ஐ.வி தடுப்புக்கு PrEP மட்டுமே தீர்வாகாது, மேலும் கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
2020 ஆம் ஆண்டின் இறுதியில், நாட்டில் மொத்தம் 92,063 பேர் HIV உடன் வாழ்கின்றனர், 13% பேர் தேசிய கண்காணிப்பு அமைப்புமூலம் அறிவிக்கப்படும் வரை அறிந்திருக்கவில்லை
2020 ஆம் ஆண்டில், மொத்தம் 3,146 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன, இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டில் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இருந்ததை விட அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.