வெளிநாட்டு தொழிலாளர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை உலகம் கவனிக்கிறது

மலேசியாவின் மோசமான தொழிலாளர் நடைமுறைகள் உலகளவில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதால், வெளிநாட்டுத் தொழிலாளர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வி சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த விரும்பும் மலேசிய நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான  வாழ்க்கைச் சூழலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இது மிக முக்கியமான மனிதாபிமானப் பிரச்சினை. வெளிநாட்டு தொழிலாளர்களை நாங்கள் தொடர்ந்து அழைத்து வர விரும்பினால், அவர்களின் நலனை உறுதி செய்வது எங்கள் பொறுப்பு, என்று அவர் இன்று இரண்டு தொழிற்சாலைகளில் தொழிலாளர் துறையுடனான கூட்டு ஆய்வின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த இரு இடங்களிலும் வெளியூர் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை மோசமாக உள்ளது.

அறைகள் தடுக்கப்பட்டும், சமையல் செய்யும் பகுதிகள் பாதுகாப்பு மற்றும் தீ அபாயகரமானதாகவும் இருப்பதாகவும், சில தொழிலாளர்கள் தூங்குவதற்கு மெத்தைகள் கூட இல்லை என்று புகார் கூறுவதாகவும் அவர் கூறினார்.

இரு முதலாளிகள் மீதும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் சிவக்குமார் கூறினார்.

நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் செயல்முறையை அரசாங்கம் எளிதாக்கத் தொடங்கியுள்ள போதிலும், தொழிலாளர்களை நடத்துவதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றார்.

நாங்கள் விதிமுறைகளை தளர்த்தியதால், முதலாளிகள் வெளிநாட்டு  தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் எண்ணப்பதில்லை. இது உலகளாவிய பிரச்சினை மற்றும் உலகமே நம்மைப் பார்க்கிறார்கள், என்று அவர் கூறினார்.

 

 

-FMT