அம்னோவிலுருந்து வெளியேறுவதே கைரிக்கு சிறந்தது

அம்னோ பொருத்தமற்றதாகிவிட்டதால், கைரி ஜமாலுடின் அரசியலில் நீடிக்க விரும்பினால், தானே வெளியேற  வேண்டும் என்று ஐந்தாவது பிரதம மந்திரி அப்துல்லா அகமது படாவியின் முன்னாள் ஆலோசகர் கூறுகிறார்.

கைரியை பதவி நீக்கம் செய்த அம்னோவின் முடிவால் தமக்கு ஆச்சரியமில்லை என்று கூறிய கலிமுல்லா ஹசன், அவர் ஒரு நாள் பிரதமராகலாம் என்றும் கூறினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவருக்கு வயது 47. டாக்டர் மகாதீர் முகமது 45 வயதில் அம்னோவால் பதவி நீக்கம் செய்யப்பட்டு இரண்டு முறை பிரதமரானார்.

50 வயதில் அன்வார் இப்ராகிம் அம்னோ தலைவராக இருந்தார். அம்னோ மற்றும் மகாதீரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமராக வந்தார், என்று அவர் ஒரு சமூக ஊடக இடுகையில் கூறினார்.

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியோ அல்லது அவரது துணை முகமட் ஹசனோ ஒரு நாளும் பிரதமராக வர வாய்ப்பில்லை என்று கலிமுல்லா கூறினார்.

அவர்கள் ஏற்கனவே மிகவும் வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் என்று முன்னாள் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குழுமத்தின் தலைமை ஆசிரியர் கூறினார்.

15வது பொதுத் தேர்தலின் போது  கட்சி ஒழுக்கத்தை மீறியதற்காக கைரி மற்றும் முன்னாள் சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமர் ஆகியோர் கட்சியால் நேற்றிரவு நீக்கப்பட்டனர்.

செம்ப்ராங் எம்.பி. ஹிஷாமுடின் ஹுசைன், முன்னாள் தகவல் தலைவர் ஷஹரில் ஹம்தான், ஜெம்போல் முன்னாள் எம்.பி. சலீம் ஷெரீப் மற்றும் தெப்ராவ் அம்னோ தலைவர் மௌலிசன் புஜாங் ஆகியோரையும் கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு பனி நீக்கம் செய்தது அம்னோ.

 

-FMT