பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது மகள் நூருல் இஸ்ஸாவை பிரதமர் துறை மற்றும் நிதி அமைச்சகம் இரண்டிலும் பொருளாதார ஆலோசகராக நியமித்தது, ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்கள் “ஒழுங்கான” முறையில் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக என்று கூறினார்.
தனது மூத்த மகள் ஊதியம் பெறாத பதவியை ஏற்றுக்கொள்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டிய அன்வார், இந்த நியமனம் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்காகவோ அல்லது தங்கள் குழந்தைகள் மற்றும் மகன் அல்லது மருமகளுக்கு மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள திட்டங்களை வழங்குவதைப் போலத் தனது குடும்பத்தை வளப்படுத்துவதற்காகவோ அல்ல என்று உறுதியளித்தார்.
“நூருல் உதவ இங்கே இருக்கிறார். அவர் எந்தப் பதவியும் இல்லாமல் உதவ முன்வந்தால், அது கேள்வி கேட்கப்படும், அது வெளிப்படையானது அல்ல, அது சரியானது அல்ல,” என்று அவர் இன்று கோலாலம்பூரில் உள்ள தேசிய விளையாட்டு கவுன்சிலில் தேசிய விளையாட்டு விருதுகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நூருல் இஸ்ஸா அன்வர்
“எங்கள் நிர்வாகம், இந்த முடிவில் சிலர் திருப்தியடையாவிட்டாலும், (நாங்கள்) ஊழலை எதிர்த்துப் போராட வந்துள்ளோம், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது எந்தவொரு அதிகாரிகளையும் அல்லது தலைவர்களையும் வளப்படுத்தவோ அல்ல என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.”
சிவில் சமூகத்தின் விமர்சனங்களை ஒப்புக்கொண்ட அவர், முன்னாள் பிரதமர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு “நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட்,” மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கியதாகக் கூறப்படுபவர்களை கடுமையாகச் சாடினார்.
“பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களைத் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கியவர்கள், அவர்களில் சிலர் பிரதமராக இருந்தபோது, இப்போது வெளிப்படைத்தன்மை பற்றிப் பேச முயற்சிப்பது பொருத்தமற்றது,” என்று அவர் கூறினார்.
பல தரப்பினரும் கூறுவதைப் போல, நூருல் இஸ்ஸாவின் நியமனத்தில் எந்த ஒரு தனிச்சலுகை இல்லை என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
“நெபோடிசம் என்பது ஒரு குடும்ப உறுப்பினருக்கு அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கும், தங்களை வளப்படுத்துவதற்கும், ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும், ஒரு பெரிய தொகையைப் பெறுவதற்கும் ஒரு பதவி வழங்கப்படுகிறது”.
“அப்படி இல்லை,” என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் கூறினார்.
பொருளாதாரம் மற்றும் நிதி ஆலோசகராக நூருல் இஸ்ஸா நியமிக்கப்பட்டது, எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இந்த நடவடிக்கையை நெபோடிசம் என்று கூறி, அந்த நியமனத்தை திரும்பப் பெறுமாறு அன்வாரை வலியுறுத்தினர்.
முன்னதாக, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா (Transparency International Malaysia) தலைவர் முகமட் மோகன் அன்வாரின் முடிவைக் கேள்வி எழுப்பினார், இது குரோனிசம் மற்றும் நெபோடிசம் மீண்டும் வருவதைக் குறிக்கலாம் என்று கூறினார்.
கடந்த காலங்களில் நெபோடிசம் மற்றும் குரோனிசத்திற்கு எதிராக அன்வார் விரிவாகப் பேசியுள்ளார், இதன் விளைவாகப் பிந்தையவரின் சமீபத்திய முடிவை மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்று முகமட் கூறினார்.