சுங்கை பூலோ சிறைச்சாலை கைதிகளால் நிரம்பி வழிவதால் துணை அமைச்சர் கவலை

மலேசியாவில் உள்ள மிகப்பெரிய சிறை வளாகம் அதிகபட்சமாக 2,500 கைதிகள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சுங்கை பூலோ சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 4,500 ஐ தாண்டியுள்ளது.

பிரதமர் துறையின் துணை அமைச்சர் ராம்கர்பால் சிங், நெரிசல் “மிகவும் கவலைக்குரியது,” என்றும் மறுவாழ்வு முயற்சிகளைப் பாதிக்கும் என்றும் கூறினார்.

“சிறைச்சாலை அமைப்பு என்பது நீதி அமைப்பின் ஒரு முக்கிய அம்சமாகும்”.

எனவே, சிறை நெரிசல் நிச்சயமாக மறுவாழ்வு திட்டங்களின் செயல்திறனை பாதிக்கும் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பில் பங்குதாரர்களை ஈடுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் துணை அமைச்சர் திங்களன்று சிறைச்சாலைக்கு வருகை தந்தார்.

கடந்த அக்டோபரில், சிறை நெரிசலை சமாளிக்க 2030 ஆம் ஆண்டிற்குள் மூன்றில் இரண்டு பங்குக் கைதிகள் சமூக மறுவாழ்வுக்கு தகுதியுள்ளவர்களாக இருக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகச் சிறைத் துறை அறிவித்தது.

சிறையில் உள்ள ஒவ்வொரு 400 கைதிகளுக்கும், 60 பேர் மீண்டும் குற்றவாளிகளாக மாறுவார்கள் என்றும், சமூக மறுவாழ்வு 400 பேரில் ஒருவர் மட்டுமே அதைச் செய்வார் என்றும் துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது சிறைச்சாலைகளின் வருடாந்த செயற்பாட்டுச் செலவில் 182 மில்லியன் ரிங்கிட் அரசுக்கு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம் கடந்த ஜூலை மாதம் குற்றவாளிகள் கட்டாய வருகை (Amendment) மசோதா 2021 இல் திருத்தங்களை நிறைவேற்றியபின்னர், இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, இது ஒரு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் குற்றங்களுக்குச், சிறைத்தண்டனைக்கு பதிலாகச் சமூக மறுவாழ்வுக்கு தண்டனை வழங்க நீதிமன்றத்தை அனுமதிக்கிறது.

தண்டனையிலிருந்து மறுவாழ்வு நீதி முறைக்கு மாறுவதற்கும், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்கும், சிறைகளுக்குப் பின்னால் தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.