புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு ஆலோசனை ஆதரவு அளிக்கச் சுஹாகாம் அழைப்பு

நெகிரி செம்பிலான், நிலாய் ஸ்பிரிங்கில் உள்ள ஒரு புலம்பெயர்ந்த குடியிருப்பில் சோதனையிடப்பட்ட “பள்ளியிலிருந்து” புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு ஆலோசனை ஆதரவை வழங்குமாறு சுஹாகாம் வலியுறுத்தியுள்ளது.

இன்று ஒரு அறிக்கையில், சுஹாகாம் தலைவர் ரஹ்மத் முகமட்(Rahmat Mohamad), குழந்தைகளின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பது குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு (Convention on the Rights of the Child) இணங்குவது மலேசியாவின் கடமை என்று வலியுறுத்தினார்.

“இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் குழந்தைகளுக்கு உடனடி ஆலோசனை ஆதரவை வழங்க வேண்டும் என்று சுஹாகாம் கேட்டுக்கொள்கிறார். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குறுகிய கால தேவைகளுக்கு அதிகாரிகள் பதிலளிப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது”.

“எந்தவொரு குடிவரவு கொள்கை முடிவுகளிலும் குழந்தைகளின் பாதிப்பு மற்றும் உணர்திறன் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதிகாலை சோதனை குழந்தைகளின் மனநிலையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்று ரஹ்மத் (மேலே) கூறினார்.

தடுப்புக்காவல் (alternative to detention) திட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் செயல்படுத்தவும் சுஹாகம் பரிந்துரைத்தது.

இத்திட்டம் தற்காலிகமாகப் புலம்பெயர்ந்த குழந்தைகளைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கிறது, அவர்களின் குடியேற்ற நிலை தீர்மானிக்கப்படுவதற்கு காத்திருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு உகந்ததாகும்.

நேற்றைய சோதனையில் 72 வயது மற்றும் இரண்டு மாத குழந்தை உட்பட 67 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்தவர்களிடம் தற்காலிக பயண ஆவணங்கள் இருந்தன, அவை பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக இந்தோனேசிய தூதரகத்தால் வழங்கப்பட்டவை மற்றும் அவை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்று மலேசியாகினியிடம் பேசிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட வேலை இழப்புகள் காரணமாக அவர்கள் புறப்படுவது தாமதமானது, எனவே அவர்கள் திரும்புவதற்கான டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்கு பணம் இல்லை.

நெகிரி செம்பிலான் குடிவரவு இயக்குநர் கென்னித் டானின் கூற்றுப்படி, பிடிபட்ட அனைவரும் லெங்கெங் குடிவரவு கிடங்கில் சட்ட அங்கீகாரம் இல்லாமல் நாட்டிற்குள் நுழைவதற்கும் தங்குவதற்கும் குடிவரவு விதிமுறைகளின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 ஆண்கள், 20 பெண்கள், 20 சிறுவர்கள் மற்றும் 16 சிறுமிகள் அடங்குவதாக டான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கைதுச் செய்யப்பட்டவர்கள் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தோனேசிய தூதரகத்தால் சந்திக்கப்படுவார்கள், மேலும் அவர்கள் இந்தோனேசியாவுக்குத் திரும்புவதற்கு வசதி செய்யப்படும் என்று மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ தெரிவித்துள்ளார்.

மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குறிப்பாகக் கைது மற்றும் தடுப்புக்காவல் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று ஹெர்மோனோ மேலும் கூறினார்.