பாரிசான் நேசனலில் மஇகா கிட்டத்தட்ட ‘இல்லாதது’ போல் தெரிகிறது – சரவணன்

மஇகா துணைத் தலைவர் எம் சரவணன், பாரிசான் நேசனலில் அதன் பங்காளிகள் மத்தியில் ம இ கா கட்சி “இல்லாதது” போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டிய ஆறு மாநிலத் தேர்தல்களுக்கான பிஎன் திட்டங்களைப் பற்றி விவாதிக்க மஇகா-வின்  ஆலோசனையை இன்னமும் பெறவில்லை என்று சரவணன் கூறினார்.

கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல, நாங்கள் (எம்ஐசி) இல்லை என்பது போலவும் தெரிகிறது.

தைப்பூசக் கொண்டாட்டத்திற்காக பத்து கோவிலுக்கு சென்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இன்னும் நான்கு முதல் ஆறு மாதங்களில் மாநிலத் தேர்தல்களை எதிர்பார்க்கிறோம், விரைவில் பிஎன் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஒரு சந்திப்பை நடத்தும் என்று நம்புகிறேன்.

மஇகாவிற்கு ஆதரவு குறைவாக இருந்தாலும், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் பிஎன் வெற்றியை உறுதி செய்வதில் அக்கட்சி முக்கியப் பங்காற்ற முடியும் என்று தபா எம்பி கூறினார்.

கடந்த மாதம், மஇகா தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரன், இந்த ஆண்டு மாநிலத் தேர்தல்களில் பிஎன் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையேயான ஒத்துழைப்பைப் பற்றிய எந்த முடிவும் பிஎன் கூறு கட்சிகளிடையே ஒருமித்த கருத்துடன் எட்டப்பட வேண்டும் என்றார்.

பக்காத்தான் ஹராப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் மற்றும் பாஸ் -ல் இயங்கும் கிளந்தான், தெரெங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் ஜூன் மாதத்திற்குப் பிறகு தேர்தல்களை நடத்த உள்ளன.

 

 

-FMT