வாரிசான்: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ‘கட்சி தாவுதல்’ குறித்து எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்

சபாவில் உள்ள மூன்று மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாரிசானை விட்டு வெளியேறி முதல்வர் ஹாஜிஜி நூருக்கு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களாகத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பது தொடர்பான பிரச்சினைகுறித்து உடனடியாக விசாரணைகளைத் தொடங்க எம்ஏசிசி வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாரிசான் துணைத் தலைவர் ஜுன்ஸ் வோங்(Junz Wong), கட்சியிலிருந்து விலகியவர்களில் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு பதவிகள் மற்றும் பெரும் தொகைகள் வழங்கப்பட்டதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

“மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தாவியது குறித்து எம்ஏசிசி விசாரிக்க வேண்டும், அவர்களில் ஒருவர் ஜூன் மாதம் ஒரு வீடியோவைப் பதிவு செய்தார், வாரிசானை விட்டு வெளியேற மில்லியன் கணக்கான ரிங்கிட் மற்றும் பதவிகள் தங்களுக்கு வழங்கப்படுவதாகப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்”.

“ஒற்றுமைபற்றிய பேச்சு என்பது ஹாஜிஜியின் ‘பின்வாசல் அரசாங்கம்’ நமது சட்டமன்ற உறுப்பினர்களை (தங்கள்) சொந்த அரசியல் நலன்களுக்காகத் தொடர்ந்து ‘விலைக்கு’ வாங்குவதற்கான ஒரு தாமதமான தந்திரோபாயமாகும்”.

“வெளிப்படையாக, அத்தகைய பேச்சு ஒருபோதும் நேர்மையானது அல்ல, பணம் இன்னும் ராஜாவாக இருக்கிறது,” என்று வோங் (மேலே) ஒரு அறிக்கையில் கூறினார்.

இடமிருந்து: பாங்கி சட்டமன்ற உறுப்பினர் முகமது மொஹமரின், குனாக் சட்டமன்ற உறுப்பினர் நோராஸ்லினா ஆரிஃப் மற்றும் தஞ்சோங் கபூர் சட்டமன்ற உறுப்பினர் சோங் சென் பின்

பாங்கி சட்டமன்ற உறுப்பினர் முகமட் மொஹமரின்(Mohammad Mohamarin), குனாக் சட்டமன்ற உறுப்பினர் நோரஸ்லினா ஆரிஃப்(Norazlinah Arif) மற்றும் தஞ்சோங் கபோர் சட்டமன்ற உறுப்பினர் சோங் சென் பின்(Chong Chen Bin) ஆகிய மூவரும் கட்சி தாவியவர்கள் ஆவர்.

சபாவில் உள்ள அரசியல் கூட்டணிகளின் திசை மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளில் அடிமட்ட மக்களின் கருத்துக்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பரிசீலித்தபின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூவரும் நேற்று ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் நோராஸ்லினா தனது டிக்டோக் கணக்கில் ஒரு வீடியோவைப் பதிவேற்றியதாக மலேசியாகினியின் சோதனைகள் காட்டுகின்றன, அதில் அவர் வாரிசனை விட்டு வெளியேறும்படி தூண்டப்பட்டதை வெளிப்படுத்தினார்.

ஷாஃபி அப்தால் தலைமையிலான கட்சிக்குத் தனது விசுவாசத்தை உறுதிப்படுத்திய அவர், மக்கள் மற்றும் அவரது தொகுதிகளுக்காக வாரிசானை விட்டு வெளியேறமாட்டேன் என்று கூறினார்.

“நான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, வாரிசனுக்கு வாக்களித்தே”

“எனவே, வாரிசனை புறக்கணிக்க என்னால் முடியாது. அது எனக்கு வெற்றியைத் தந்தது”.

கூட்டாட்சி மட்டத்திலும் பல மாநிலங்களிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட போதிலும், கட்சி தாவல் சட்டம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததற்கு “சபாவில் பண அரசியல்” தான் காரணம் என்று வோங் கூறினார்.

ஜி.ஆர்.எஸ் அரசாங்கம் மக்களுக்கு நன்றாகச் சேவை செய்யக் கடினமாக உழைக்க வேண்டும் அல்லது ஆட்சி மற்றும் மக்களுக்குச் சேவை செய்வதில் அதன் மோசமான செயல்திறனைத் தொடர்ந்து அவர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

‘வாரிசனால் எதுவும் மாறாது’

வாரிசானைப் பொறுத்தவரை, கட்சி மாறாது, சபாவின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் என்று வோங் கூறினார்.

“எங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு வாரிசான் முழு ஆதரவையும் வழங்கும்,” என்று தஞ்சோங் ஆறு(Aru) சட்டமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

வாரிசனிலிருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதன் மூலம், 79 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில் மாநில எதிர்க்கட்சிக்கு வெறும் 32 இடங்கள் மட்டுமே உள்ளன, இதில் வாரிசானிலிருந்து 16 இடங்களும் அடங்கும்.

புங் மொக்தார் ராடின்(Bung Moktar Radin) தலைமையிலான சபா  BN ஹாஜிஜிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து ஹாஜிஜி அவரைக் கவிழ்க்கும் முயற்சியில்  ஒரு மாதத்திற்கு முன்பு சபாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.