பூகம்பம்: மலேசியா 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை துருக்கி மற்றும் சிரியாவிற்கு வழங்கும்

திங்களன்று அதிகாலை இரு நாடுகளையும் தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மலேசியா 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரிம8.6 மில்லியனுக்கும் அதிகமானது) துருக்கி மற்றும் சிரியாவிற்கு வழங்கும்.

இந்த நோக்கத்திற்காக மலேசிய அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்க அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மேலும் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கந்தரும் (Ibrahim Almarhum Sultan Iskandar) வழங்க ஒப்புக்கொண்டதாகவும்  பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அதே நேரத்தில், கூட்டாட்சி பிரதேசங்கள் இஸ்லாமிய மத கவுன்சில் மனிதாபிமான உதவியாக ரிம10 மில்லியனை ஒதுக்கியுள்ளது, இது  துருக்கி மற்றும் சிரியாவிற்கு அனுப்பப்படும் என்றார்.

தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். சைப்ரஸ் மற்றும் லெபனானில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மலேசியா தனது இரண்டாவது சிறப்பு மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவை (Smart) இன்று இரவு துருக்கிக்கு அனுப்பி அங்குத் தேடல் மற்றும் மீட்பு (search and rescue) நடவடிக்கைகளில் சேரும் என்று அன்வார் கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (National Disaster Management Agency’s) கீழ் உள்ள குழுவில் ஸ்மார்ட் மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 70 உறுப்பினர்கள் இருப்பார்கள்.

“முதல் குழு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், துருக்கி அரசாங்கம் மேலும் குழுவை அனுப்பு கோரியது,” என்று அவர் கூறினார்.