இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது 15 வயது மகனை இஸ்லாத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக ஒரு பெண் கூறிய வழக்குகுறித்து போலீசார் விசாரணை அறிக்கையை (investigation paper) திறந்துள்ளனர்.
சேராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP ஜாம் ஹலீம் ஜமாலுடின்(Zam Halim Jamaluddin) கூறுகையில், அந்தப் பெண் நேற்று புகார் அளித்தார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 298A இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது, இது மத அடிப்படையில் ஒற்றுமையின்மை அல்லது பகைமை அல்லது தீய எண்ணங்களை ஏற்படுத்துவதை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
“போலீசார் பல சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர், மேலும் பொதுமக்கள் ஊகிக்க வேண்டாம்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்தச் சம்பவம்குறித்து தகவல் தெரிந்த எவரும் சேராஸ் காவல்துறையை 03-92845050/5051 என்ற எண்ணிலும், கோலாலம்பூர் காவல்துறையை 03-21159999 அல்லது எந்தவொரு காவல் நிலையத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஜாம் ஹலீம்(Zam Halim) கூறினார்.