இஸ்லாமிய சமய மன்ற விசாரணையில் ஊழல் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை – MACC

நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய மன்றம் (Mains) Zakat Sdn Bhd சம்பந்தப்பட்ட ஜகாட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகுறித்த விசாரணையில் எந்த ஊழலும் இல்லை.

மாநில MACC  இயக்குனர் அவ்கோக் அஹ்மத் தௌபிக் புத்ரா அவ்ஜி இஸ்மாயில்(Awgkok Ahmad Taufik Putra Awg Ismail), 2019 ஆம் ஆண்டில் ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு விசாரணை நிறைவடைந்துள்ளது என்றார்.

“அதைத் தொடர்ந்து, சமீபத்திய டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்டதைப் போல ஊகங்கள் மற்றும் தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரும் வலியுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொது நிதி சம்பந்தப்பட்ட ஊழலை எதிர்த்துப் போராட மாநில MACC உறுதிபூண்டுள்ளது என்றும், புதிய தகவல்கள் கிடைத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.