மாஜிஸ்திரேட் இஸ்கந்தர் ஜைனோல், ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் வழக்கின் இறுதி பகுதியை சமர்பிக்குமாறு நேற்று அரசு தரப்புக்கு ஆணையிட்டார்.
இந்த 2018 கலவரம் அடிப் என்ற ஒரு தீயணைப்பு வீரர் காயங்களால் இறந்த பிறகும் தலைப்புச் செய்திகளாக உருவாகியது.
சுபாங் ஜெயாவில் உள்ள சீபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கலவரம் செய்ததாக 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசுத் தரப்பு தனது வழக்கை முடிக்கு கொண்டு வந்தது.
இந்த நிகழ்வை விசாரணை செய்த போலிஸ் அதிகாரி அலி யுஸ்ரான் இறுதி சாட்சியாக இருந்தார், அதற்கு முன் துணை அரசு வக்கீல் வாபி ஹுசைன் அரசு தரப்பு வழக்கை முடித்துக் கொள்கிறது என்று மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார்.
கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சைபுல்லா அப்துல்லா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கீர்த்திராஜ் ராஜசுந்தரம், 2019-ல் வழக்கு விசாரணை தொடங்கியதில் இருந்து சுமார் 20 சாட்சிகள் அரசு தரப்புக்கு சாட்சியாக ஆதாரம் அளித்துள்ளனர் என்றார்.
சைபுல்லாவைத் தவிர, ரிதுவான் சேக் ருஸ்லான், இர்வான் நூர்டின், கைரி அப்துல் ரஷீத், ரோசைஹான் ஜகாரியா, கயூம் முகமது பைசல், அஷ்ரப் முகமது பைசல், அப்சல் ஈஸ்ட்ரி அப்துல்லா, ஜலீல் தலிப், கைரோல் அனுவார் ஜாபிடி, ஜம்ரி என், அப்துல் ரசித், ஜம்ரி, எம். கானி, ஷஹரில் டேனியல் சஜீல், ஹஸ்னீசம் ஷா சம்சுதீன், அக்மல் இஸ்ஸாத் அஸி மற்றும் நோருல் இஸ்மாவி இஸ்லாஹுதீன் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த 24 முதல் 47 வயதுடைய நபார்கள் மீது, நவம்பர் 26, 2018 அன்று அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கலவரத்தில் ஈடுபட்டதாகவும், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 148ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
விசாரணை முடிவடையும் வரை அனைவருக்கும் ஜாமீன் வ்ழங்கப்பட்டுள்ளது.
இதுவரை மூன்று மாஜிஸ்திரேட்டுகள் இந்த வழக்கிற்கு தலைமை தாங்கினர், நான்கு டிபிபிகள் விசாரணையை நடத்தினர்.
கலவரம் நடந்த இடத்தில் பணியில் இருந்தபோது காயமடைந்த தீயணைப்பு வீரர் அடிப் முகமட் காசிம் ஒரு மாதத்திற்குப் பிறகு தேசிய இதய நிறுவனத்தில் இறந்தபோது இந்த சம்பவம் தலைப்புச் செய்தியானது.
2019 ஆம் ஆண்டில், “இரண்டுக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள்” தீயணைப்பு வீரரைக் கொன்றதாக அந்த மரணத்தை விசாரணை செய்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், அடிப்-பின் தந்தை காசிம் அப்துல் ஹமிட், முன்னாள் அட்டர்னி ஜெனரல் டோமி தாமஸ், விசாரணை நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறிய தனது வழக்கை வாபஸ் பெற்றார்.
எவ்வாறாயினும், மேல்முறையீட்டை வாபஸ் பெறுவதற்கான முடிவு, அடிப்பின் மரணத்திற்கு காரணமானவர்களைத் தேடுவதை காவல்துறை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்று காசிமின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர், குற்றவியல் விசாரணைகளுக்கு கால அவகாசம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 3, 2019 அன்று ஏஜிசி ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி டோமி தாமஸுக்கு எதிராக காசிம் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார், இது அடிப்பின் மரணம் யாரோ ஒருவர் ஏற்படுத்திய காயங்களால் அல்ல என்பதைக் குறிக்கிறது.
விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மே 28, 2019 அன்று ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டதன் மூலம் தாமஸ் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாகவும் காசிம் குற்றம் சாட்டினார்.
FMT