2017 முதல் 3,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்

2017 மற்றும் 2021 க்கு இடையில் மலேசிய சுகாதார அமைச்சகத்தால் (KKM) நியமிக்கப்பட்ட 29,548 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளில் மொத்தம் 3,386 பேர் ராஜினாமா செய்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா(Zaliha Mustafa) தெரிவித்தார்.

அவர்களில் 110 பேர் 2017ல் ராஜினாமா செய்ததாகவும், 168 (2018), 475 (2019), 511 (2020), 768 (2021) மற்றும் 2022 இல் 1,354 பேர் ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறினார்.

“அவர்கள் வெளியேறியதற்கான காரணங்களில் ஒன்று, அவர்கள் தனியார் துறை அல்லது அதிக  ஊதியத்தை வழங்கும் பிற சட்டப்பூர்வ அமைப்புகளில் சேரத் தேர்ந்தெடுத்தனர்”.

மேலும், அவர்களில் சிலர் தங்களுடைய சொந்த மருத்துவ மனைகளைத் திறந்தனர், தங்கள் படிப்பை மேற்கொள்கின்றனர், வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள்,” என்று அவர் கூறினார்.

கூடுதல் அழுத்தம் உட்பட எதிர்மறையான தாக்கங்களைக் கொண்டு வந்த மருத்துவர்களிடையே கொடுமைப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள்குறித்து முகமட் தௌபிக் ஜோஹாரி (Pakatan Harapn-Sungai Petani) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சாலிஹா (மேலே) இது சில காலமாக நடந்து வருவதாகவும், இது போன்ற வழக்குகள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

அனுபவம் வாய்ந்த மருத்துவ அதிகாரிகள் (seniors) புதிய மருத்துவ அதிகாரிகளை (juniors) வழிகாட்டிகளாக வழிநடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார், இதனால் புதிய அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதில் சுமுகமாக இருப்பதை உறுதி செய்தார்.

கூடுதலாக, 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அதன் 3,119 சுகாதார கிளினிக்குகளில் 1,200 மோசமான மற்றும் பாழடைந்த நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும்  சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான விண்ணப்பத்தை அமைச்சகம் சமர்ப்பித்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை மர கட்டமைப்புகளில் கட்டப்பட்டுள்ளன என்றும் ஜாலிஹா கூறினார்.

“அதனால்தான் சுகாதார அமைச்சகம் பட்ஜெட் ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது, ஏனெனில் எங்கள் சுகாதார வசதிகளில் செலவுகளை ஈடுசெய்ய இந்த நிதியின் தொடர்ச்சியை நாங்கள் விரும்புகிறோம்,” என்று சாலிஹா கூறினார்.

நிதி தேவைகளின் அடிப்படையை விளக்கும் மற்றும் மேம்பட்ட சுகாதார விநியோக மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டும் சுகாதார வெள்ளை அறிக்கையையும் அமைச்சகம் தாக்கல் செய்யும் என்று அவர் கூறினார்.