சபாவில் வெள்ளம் காரணமாக 464 பேர் வெளியேற்றப்பட்டனர்

கோட்டா மருது மற்றும் டோங்கோடு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 166 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

149 குடும்பங்களைச் சேர்ந்த 377 பேர் கோட்டா மருது சமுதாயக் கூடத்தில் உள்ள நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகச் சபா பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தின் கூற்றுப்படி, 17 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 87 பேர் டோங்கோட்டில் உள்ள திவான் மினி கம்போங் சிம்பாங் எண்டிலிபோனில் உள்ள மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

“இரண்டு வெளியேற்ற மையங்களும் நேற்றிரவு திறக்கப்பட்டன,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டோங்கட் மற்றும் கோட்டா மருதுனில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இருப்பினும், இன்று காலைச் சபாவின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை நன்றாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் முன்னறிவிப்பின் அடிப்படையில், இன்று மாலை முதல் நாளை வரை சபாவில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது