நாட்டின் முன்னணி மலாய் அரசியல் சக்தியாக பெர்சத்துவின் எழுச்சியைப் பற்றிக் கூறிய அந்த கட்சியின் தலைவர் முகைதின் யாசின், அதன் தற்போதைய தலைமையின் கீழ் “அம்னோவின் அஸ்தமனமாகும்’ என்று கணித்துள்ளார்.
இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒன்றாக இணத்த பெர்சத்துவின் அரசியல் ஆதிக்கம் ஒரு புதிய அரசியல் பாதையை அமைத்துள்ளது.
இன்று பெர்சாத்துவின் 5வது ஆண்டு பொதுச் சபையில் தனது தலைமைய உரையில் முகைதின் எந்தப் பெயரையும் குறிப்பிடுவதைத் தவிர்த்து விட்டு, அம்னோவின் அரசியல் மறைந்து போக காரணமான இருக்கும் ஒரு “தனி நபர்” என அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை தெளிவாகக் குறிப்பிட்டார்.
“இந்த தனி நபரின் தலைமையிலான அம்னோ இனி மலாய் அரசியல் அதிகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க இயலாது. காரணம் அது பக்காத்தான் ஹராப்பானின் ஆட்சியை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது என்றார்.
“எங்களுக்கும் பெரும்பான்மையான மலாய்க்காரர்களுக்கும் இதுதான் அம்னோவின் முடிவாக இருக்கும். “இது அம்னோவின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இறுதி ஆணி,” என்றார் முகைதின்.