பேரா மாநிலத்தில் உள்ள ஒரு சாலைக்கு சாமிவேலுவின் பெயர் சூட்டப்பட்டது

ஈப்போ-பட்டர்வொர்த், 9.3 கிமீடிரங்க் சாலைக்கு முன்னாள் பணித்துறை அமைச்சராக இருந்த மறைந்த எஸ்.சாமிவேலுவின் பெயர் சூட்டப்பட்டது.

ஃபெடரல் அரசிதழின் படி, அது இப்போது துன் டாக்டர் எஸ் சாமி வேலு சாலை என்று அழைக்கப்படும். இந்த சாலை, கிந்தா-குவாலா கங்சார் எல்லையில் இருந்து தொடங்கி பேராக்கின் சுங்கை சிபுட்டில் உள்ள தாமான் மக்மூர் சந்திப்பில் முடிவடைகிறது.

2002 முதல் 2008 வரை சாமிவேலுவின் பத்திரிகைச் செயலாளராகவும், பின்னர் 2010 முதல் 2018 வரை அவரது மூத்த தனிச் செயலாளராகவும் பணியாற்றிய இ.சிவபாலன், இது முன்னாள் அமைச்சரின் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

சாமிவேலு தனது 86வது வயதில் செப்டம்பர் 15ஆம் தேதி காலமானார்.

அவர் 1974 முதல் 2008 வரை சுங்கை சிபுட் எம்.பி.யாகவும், 1979 முதல் 1989 வரை பணி அமைச்சராகவும் பணியாற்றினார். 1989 முதல் 1995 வரை எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் துறை அமைச்சராக இருந்தார்.

1979 முதல் 31 ஆண்டுகள் மஇகா தலைவராக இருந்த சாமிவேலு, ஹுசைன் ஓன், டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அப்துல்லா அகமது படாவி ஆகிய மூன்று பிரதமர்களின் கீழ் பணியாற்றினார்.

 

-fmt