மார்ச் 13 அன்று மலேசியாவில் இருந்து பிரிஸ்பேன் வழியாகக் கன்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 336 கிலோ ஹெராயினை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்ததில் வெற்றி பெற்றதாகப் போலீசார் உறுதிப்படுத்தினர்.
இநதப் போதைப்பொருளின் மதிப்பு 268.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரிம789.56 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளதாக ராயல் மலேசியா போலீஸ் செயலாளர் நூர்சியா முகமட் சாதுடின்(Noorsiah Mohd Saaduddin) தெரிவித்தார்.
“மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையிடமிருந்து (Australian Federal Police) பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புக்கிட் அமான் போதைப்பொருள் சிஐடி விசாரணை நடத்தி வருகிறது,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.
கடந்த வாரம் AFP ஒரு அறிக்கையில், ஆஸ்திரேலிய எல்லைப் படை (AFP) 500 கிலோ எடையுள்ள இரண்டு கான்கிரீட் சிமெண்ட் துண்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளைக் கண்டறிந்ததாக அறிவித்தது.
மலேசியாவிலிருந்து மார்ச் 13-ம் தேதி பிரிஸ்பேன் துறைமுகத்திற்கு வந்த கன்டெய்னரில் சோலார் பேனல்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
AFP அதிகாரிகள் கொள்கலனை ஆய்வு செய்ததாகவும், சிமெண்ட் கான்கிரீட் கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பொட்டலங்களைக் கண்டறிந்ததாகவும், பொட்டலங்களில் உள்ள பொருள்குறித்த சோதனை முடிவுகள் அது ஹெராயின் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.