ஹரி ராய ஐடில்பித்ரியை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் பத்லினா சிடெக்(Fadhlina Sidek) அறிவித்துள்ளார்.
“கல்வி அமைச்சின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைவரின் நலனையும் நாங்கள் கருத்தில் கொண்டோம்”.
இன்று புத்ராஜெயாவில் கல்வி அமைச்சின் ஒருமைப்பாடு மற்றும் ஊழலற்ற மன்றத்தில் கலந்து கொண்ட பிறகு, “மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல நீண்ட காலம் எடுக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ஆசிரியர்களுக்கான சிறப்பு விடுமுறையை ஏப்ரல் 19 ஆம் தேதி ஒதுக்குமாறு கல்வி அமைச்சிடம் தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் (NUTP) வலியுறுத்தியதை அடுத்து இது நிகழ்ந்துள்ளது.
பெரிட்டா ஹரியான் அறிக்கையின்படி, NUTP தலைவர் அமினுடின் அவாங் சிறப்பு விடுமுறை அவசியம் என்று கூறினார், ஏனெனில் ஐடில்பித்ரியின் முதல் நாள் ஏப்ரல் 21 அன்று வரக்கூடும், இது அதிகாரப்பூர்வ தேதியைவிட ஒரு நாள் முன்னதாகும்.
கூடுதல் விடுமுறை நாள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் கொண்டாட்டங்களுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அதிக நேரம் கிடைக்கும் என்றார்.
கூடுதலாக, இது ஐடில்பித்ரி வார இறுதியில் சாலை நெரிசலைக் குறைக்கும் என்று அமினுடின் கூறினார்.