ஒரு வகுப்பறை கட்ட ரிம 26 லட்சமா? இல்லை என்கிறார் கல்வி அமைச்சர்

ஒரு வகுப்பறையை கட்டுவதற்கான சராசரி செலவு ரிம் 18 லட்சம் முதல் ரிம 26 லட்சம்  வரை இருக்கும் என்று பூச்சோங் நடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் கூறியிருந்தார். அதை கல்வி அமைசர் பத்லினா மறுத்துள்ளார்.

பள்ளி வகுப்பறையை கட்டுவதற்கு 26 லட்சம் ரிங்கிட் வரை செலவாகும் என்ற பூச்சோங் எம்பி யோ பீ யின் கூற்றை கல்வி அமைச்சர் பத்லினா சிடேக் மறுத்துள்ளார். பள்ளி வகுப்பறைகளின் கட்டுமானம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான விதிமுறைகளைப் பின்பற்றுகிறது என்று கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் (இடது) கூறினார்.

டிஏபி எம்பி கூறிய கூற்று தவறானது என்றும், வகுப்பறைகள் கட்டுவதில் தனது அமைச்சகத்தின் செயல்முறைகள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான விதிமுறைகளை பின்பற்றுவதாக பத்லினா கூறினார்.

“அனைத்து பணி செயல்முறைகளுக்கும் வேலை வாய்ப்பு, ஆலோசனை மற்றும் பணித் தரங்கள் தேவை, அவை திட்டங்களை நிறைவு செய்வதில் கல்வி அமைச்சகத்தால் அடையப்பட வேண்டும்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கடந்த வாரம், டேவான் ரக்யாட்டிடம், ஒரு வகுப்பறையை கட்டுவதற்கான சராசரி செலவு ரிம 18 லட்சம் முதல் ரிம 26 லட்சம்  வரை இருக்கும் என்று யோ  கூறினார், இது ஒரு ஆடம்பர காண்டோமினியத்தின் விலைக்கு சமம் என்றும் கூறினார்.

பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அரசாங்கம் அதிக விவேகமான செலவீனங்களைச் செய்வதை உறுதிப்படுத்துமாறு அந்த முன்னாள் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், பள்ளிகளில் ஊழலுக்கு எதிரான மற்றும் குடிமைப் படிப்புகளை ஊக்குவிப்பதில் தான் உறுதியாக இருப்பதாகக் கூறிய பத்லினா, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் ஏற்கனவே இந்தத் தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.

ஊழலை “கீழிருந்து மேல்” எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் ஆர்வத்தை இது பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

“நமது நாட்டில் ஜனநாயகம் மற்றும் நாட்டுப்பற்று பற்றிய அவர்களின் புரிதலை மேம்படுத்த குழந்தைகளிடையே அதிக தொடர்புகளை உள்ளடக்கிய பிற திட்டங்களும் எங்களின் முனைப்புகளில் அடங்கும்”, என்று அவர் கூறினார்.