பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய நபர் கைது

நெகிரி செம்பிலானின் போர்ட் டிக்சனில் ஒரு பெண்ணை அவதூறாகப் பேசியதாக 38 வயது நபரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் பிற்பகல் 3.40 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று போர்ட் டிக்சன் காவல்துறைத் தலைவர் அய்டி ஷாம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக சோதனை செய்துள்ளார் மற்றும் அவருக்கு எந்த குற்றப் பதிவும் இதுவரை இல்லை, என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக சிறு குற்றச் சட்டம் 1955 பிரிவு 14ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று அதிகாலை, பண்டார்  ஸ்பிரிங்ஹில் தனது காரை நகர்த்தச் சொன்ன  ஒரு பெண்ணை, ஒரு ஆண் அவதூறாகப் பேசுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

அந்த காணொளியில், அந்த ஆணின் கார் வெளியே செல்லும் வழியைத் தடுப்பதாகவும், அவரது காரை நகர்த்துமாறு பணிவுடன் கேட்டதாகவும் அந்தப் பெண் கூறினார். இருப்பினும், அதனை மறுத்த அந்த நபர் தொலைபேசியில் பேசிக்கிக்கொண்டு அந்த பெண்ணின் வேண்டுகோளை புறக்கணித்துள்ளார்.

அந்தக் காணொளியில் அந்த நபர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது  அந்த பெண் குறித்து புகார் கூறியதும் பதிவாகியுள்ளது.

-fmt