நீதிபதி பதவிவிலக வேண்டும், கர்பால் மீண்டும் வலியுறுத்து

கருத்துத்திருடு குற்றம் சாட்டப்பட்டு அதற்கு எவ்வித மறுமொழியும் கூறாதிருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் மாலிக் இஷாக் பதவி விலக வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் கர்பால் இன்று மறுபடியும் வலியுறுத்தினார்.

நீதிபதி அப்துல் மாலிக் “ ஒழுக்கக்கேடான செயல்” புரிந்திருப்பதாகவும் எனவே பொதுநலன் கருதி அவர்  பதவி விலக வேண்டும் என்றும் கர்பால் கோரிக்கை விடுத்தார்.

“மேல்முறையீட்டு நீதிமன்றப் பதவி வகிக்க இனியும் அவருக்குத் தகுதியில்லை.

“அவர் தொடர்ந்து அங்கிருப்பது நீதித்துறைக்கு சங்கடத்தைத் தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை”, என்று புக்கிட் குளுகோர் டிஏபி எம்பியுமான கர்பால் குறிப்பிட்டார்.

நீதிபதிக்கு எதிரான கருத்துத்திருடு குற்றச்சாட்டு முதலில் 2,000ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டு அது சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்குமிடையில் சர்ச்சையை உண்டு பண்ணியது.

சிங்கப்பூர் அதிகாரிகள் அக்குற்றச்சாடை முன்வைத்தபோது  பிரதமர்துறையில் சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்தவர் ரயிஸ் யாத்திம். ஆனால், அவர் அப்புகார் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றித் தமக்குத் தெரியாது என்றும் 2004-இல் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் கூறினார்.

அப்துல் மாலிக் ஒரு வழக்கில், சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றைத் திருடிப் பயன்படுத்திக்கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

TAGS: