அடுத்த மாதம் சிலாங்கூர் சட்டசபையை கலைக்க சுல்தானை சந்திப்பார் MB

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி, சிலாங்கூர் சுல்தான்  ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவை ஜூன் மூன்றாவது வாரத்தில் சந்தித்து மாநில சட்டமன்றத்தைக் கலைக்கக் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநில சட்டசபை ஜூன் 25ம் தேதி தானாக கலைக்கப்பட உள்ளது.

“மாநில சட்டசபையை கலைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஜூன் 25க்கு முன் கோரிக்கை வைப்பேன். நான்  ஜூன் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் சுல்தானை சந்திப்பேன்.”

“ஜூன் இரண்டாவது வாரத்தில் கூட இருக்கலாம்,” என்று அவர் ஒரு நோன்பு பெருநாள் நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

-fmt