பயிற்சியாளர்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன – பிரதமர்

பிரதமர் அன்வார் இப்ராஹிம், தொழிற்பயிற்சி பெறும்போது சில மாணவர்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற கூற்றுக்கள் குறித்த அறிக்கைக்காகக் காத்திருப்பதாக இன்று கூறினார்.

இந்த அறிக்கையை மனிதவள அமைச்சகம் தற்போது ஆய்வு செய்து வருகிறது என்றார்.

“அமைச்சகம் அறிக்கையை எடுத்துள்ளது, நான் புதுப்பிப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், முகவர் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சில பயிற்சியாளர்களுக்குக் கொடுப்பனவு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர்களின் நலனைப் பாதுகாக்க ஒரு சிறப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிப்பதாக அன்வார் மேலும் கூறினார்.

“நிதியமைச்சகத்திற்கும் எனக்கும் முன்மொழிவு கிடைத்தவுடன், நான் உரிய நடவடிக்கை எடுப்பேன்,”என்று அவர் கூறினார்.