பேஸ்பால் மட்டையால் தாக்கியதற்காக 3 இளைஞர்கள் கைது

கிள்ளானில், வீடற்றவர் என்று நம்பப்படும் ஒருவரை உலோக பேஸ்பால் மட்டைகளால் தாக்கியதாகக் கூறப்படும் மூன்று வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவத்தின் வீடியோக்கள், 16 வயதுடைய அவர்கள், பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதற்கு முன்பு காரில் இருந்து வெளியே வருவதைக் காட்டியது.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் வெவ்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேரையும் தாக்கியிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் இரண்டு வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக கிள்ளான் காவல்துறைத் தலைவர் சா ஹூங் ஃபோங் கூறினார்.

“சந்தேக நபர்களில் ஒருவருக்கு முந்தைய கேஸ் உள்ளது. மற்றொரு கூட்டாளியை தேடி வருகிறோம். மூன்று கைபேசிகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேரை நாங்கள் கண்டுபிடித்து வருகிறோம், ”என்று அவர் மேற்கோள் காட்டினார்.

மூன்று வாலிபர்களும் ஜூன் 7 ஆம் தேதி வரை காவலில்  வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை ஆவணங்கள் விரைவில் துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.