ரிம40 ஆயிரம் மதிப்புள்ள ஹெராயினுடன் படிவம் 5 மாணவர் கைது

கிளந்தானில் நேற்று 17 வயது இளைஞனை கைது செய்த போலிசார் 40,000 ரிங்கிட் மதிப்புள்ள 74.80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இடைநிலைப் பள்ளியில் படிவம் 5 மாணவரான அந்தச் சிறுவன் மாலை 5 மணிக்குக் கம்போங் லெம்பா செமெராக்கில் சாலையோரம் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டதாகப் பாசிர் புத்தே மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜைசுல் ரிசால் ஜக்காரியா தெரிவித்தார்.

சந்தேகநபர் வீதியோரத்தில் பதிவு எண் இல்லாத மஞ்சள் / கருப்பு யமஹாY15ZR மீது அமர்ந்திருப்பதைக் கவனித்ததாக அவர் கூறினார்.

சந்தேகநபர் தப்பிச் செல்ல முயற்சித்த போதிலும் மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் சோதனையிட்டபோது ஹெரோயின் என நம்பப்படும் வெள்ளை பவுடர் அடங்கிய 20 பிளாஸ்டிக் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போலிஸ் பரிசோதனையில் சந்தேகநபருக்கு மெத்தாம்பேட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டதாக ஜைசுல் ரிசால் கூறினார்.

சந்தேக நபர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39 B மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 15 (1) (a) இன் கீழ் விசாரிக்கப்படுவார்.