எதிர்க்கட்சிகளை விட பக்காத்தான் ஹராப்பானை அதிகம் விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டை மூடா தலைவர் சையத் சாடிக் சையத் அப்துல் ரஹ்மான் மறுத்துள்ளார்.
பெரிக்காத்தான் நேசனல் ஆட்சியில் இருந்தபோது, தான் தொடர்ந்து கண்டித்ததாக மூவார் எம்.பி. கூறினார்.
என் விமர்சங்கள் “இரு தரப்புக்கும்”, அதாவது பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேசனலுக்கும் தான் என்று அவர் கூறினார்.
“முந்தய அரசின் ஆட்சியில் இருந்தபோது எம்.பி.க்களுக்கு சமமான ஒதுக்கீடு என்ற பிரச்சினையை நான் முன்வைத்தேன். “தற்பொழுது ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் இருப்பதால், நாங்கள் அதையே செய்கிறோம்,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மூடா தற்போதைய பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஐக்கிய அரசுக்கு ஆதரவளித்து வருகிறது.
-fmt