கல்வி அமைச்சு: காஜாங் பள்ளியில் பாரம்பரிய உடைகளுக்குத் ‘தடை’ பிரச்சனை முடிவுக்கு வந்தது

மெர்டேக்கா தின கொண்டாட்டத்தின்போது மாணவர்கள் பிற கலாச்சாரங்களின் பாரம்பரிய உடைகளை அணிவதை தடை செய்த காஜாங் பள்ளியைச் சுற்றியுள்ள பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

பாடசாலை நிர்வாகத்தினருக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இது இடம்பெற்றதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

“அமைச்சக வழிகாட்டுதல்களின் கீழ், கலாச்சாரம் அல்லது கலை தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது, ​​மாணவர்கள் ஒழுக்கமான மற்றும் பொருத்தமான பாரம்பரிய உடைகளை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்”.

சமீபத்திய செய்தி அறிக்கைகள் தொடர்பாக, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் பேச்சு நடத்தி, பள்ளி தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதையும், எழும் விடயம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டதையும் அது எடுத்துக்காட்டியது.

நேற்று, மாணவர்களின் ஆடைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர, இந்திய மாணவர்கள் புடவை அணிவதை தடை செய்ததோடு, மணிக்கட்டில் புனித நூலை அணிந்திருப்பவர்களை அகற்றுமாறும்  பள்ளி உத்தரவிட்டுள்ளது.

“மாணவர்கள் அந்தந்த பாரம்பரிய உடைகள் மற்றும் பிற இனங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட்டனர்”.

“அவர்கள் பாரம்பரிய ஆடைகளுக்குப் பொருந்தும் வகையில் வளையல்கள், செயின்கள் மற்றும் அணிகலன்கள் போன்ற அணிகலன்களை அணியவும் அனுமதி வழங்கப்பட்டது”.

“நாட்டில் உள்ள பல இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்க்கும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்க மாணவர்களை அமைச்சகம் எப்போதும் ஊக்குவிக்கிறது,” என்று அமைச்சு மேலும் கூறியது.