சுல்தான் ஷராபுதீன் சிலாங்கூர் ராயல் ஹெரிடேஜ் வனத்தைத் திறந்து வைத்தார்

சிலாங்கூரின் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஷ் ஷா இன்று சிலாங்கூர் ராயல் ஹெரிடேஜ் வனத்தைத் திறந்து வைத்தார்.

ஷா ஆலமில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிரகடன விழாவில், சிலாங்கூர் ராஜா மூட, தெங்கு அமீர் ஷாவும் கலந்து கொண்டார்.

அதே நிகழ்வில், சிலாங்கூர் அரச பாரம்பரியக் காடுகளின் வளர்ச்சிக்கான மாஸ்டர் பிளான் புத்தகத்தைச் சுல்தான் வெளியிட்டார்.

மேலும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி மற்றும் மாநில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுசூழல் அதிகாரி ஜமாலியா ஜமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மார்ச் 17 அன்று, சுல்தான் ஷராபுதீன் மாநிலத்தின் 108,000 ஹெக்டேர் காடுகளைத் தொடர்ந்து பாதுகாக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.

நிரந்தர வனப் பகுதியில் மரம் வெட்டுதல் நடவடிக்கைகளைத் தடை செய்ய, 2009 ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட  தடைக்காலத்தை மாநில அரசு நீட்டிக்க வேண்டும் என்று கூறினார்.

108,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள சிலாங்கூர் ராயல் ஹெரிடேஜ் காடு, சிலாங்கூர் மாநில வனச் சட்டம் 1985-ன் பிரிவு 10-ன் கீழ் பாதுகாப்பு வனங்களின் வகைப்பாடுகளில் ஒன்றின் கீழ் ஒரு மாநிலப் பூங்காவாகும்.

மாநிலத்தின் வனப் பொக்கிஷங்களை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்விடங்கள், அரிப்புக் கட்டுப்பாடு மற்றும் வெள்ளத் தடுப்பு போன்றவற்றுடன், பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், மாநில அரசு உறுதியாக உள்ளது.

இன்றுவரை, சிலாங்கூரில் உள்ள நிரந்தர வனப்பகுதி 250,739.33 அல்லது மாநிலத்தின் நிலப்பரப்பில் 31.7% ஆகும்.