கிள்ளான் முன்னாள் எம்பி சார்லஸ் சாண்டியாகோ, ரோஹிங்கியாக்கள் உலகெங்கிலும் உள்ள மற்ற சிறுபான்மையினரைப் போலவே மற்றவர்களின் தாராள மனப்பான்மையை நம்பியுள்ளனர். அவர்களை மனிதபிமானத்துடன் பார்க்க வேண்டும் என்றார்,
ரோஹிங்கியாக்கள் ராக்கைன் மாநிலத்தில் அவர்களது சொந்த அரசாங்கத்தால் இடம்பெயர்ந்து “கொலை செய்யப்பட்டுள்ளனர்” என்றும் அவர்கள் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடுவதாகவும் சார்லஸ் சாண்டியாகோ கூறினார்.
“அவர்களின் அவலநிலைக்கு நாங்கள் அதிக அனுதாபத்துடன் இருக்க வேண்டும்,” என்று சாண்டியாகோ கூறினார்.
உலகெங்கிலும் உள்ள மற்ற சிறுபான்மையினரைப் போலவே ரோஹிங்கியாக்களும் மற்றவர்களின் தாராள மனப்பான்மையை நம்பியிருக்கிறார்கள், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சாண்டியாகோ கூறினார்.
மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணைத் தலைவரான சாண்டியாகோ, பாலஸ்தீனியர்களுக்கு மலேசியர்கள் உதவுவதைப் போலவே, அவர்களும் நாட்டில் உள்ள ரோஹிங்கியாக்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினார்.
“அரசாங்கம் ரோஹிங்கியாக்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், இது வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும்.” என்கிறார் சார்ல்ஸ்.