ஜொகூர் கோவிலில் வெள்ளத்தில் சிக்கிய 17 பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

ஜொகூர், கம்பங் கங்கர் தெப்ராவ் கிரியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் மகா மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவிற்கு தயாராகி கொண்டிருந்த 17 இந்து பக்தர்களை நேற்று இரவு, திடீரென வெள்ளத்தில் சிக்கினர், அவர்கள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தங்களுக்கு இரவு 10.13 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியதாகவும் தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு அதிகாரி  கைருல் அசார் அப்த் அஜீஸ் தெரிவித்தார்.

“பகலில் பெய்த கனமழையால் கோயில் நிர்வாகம் தீயணைப்புத் துறையைத் தொடர்புகொள்வதற்குள் 3 மீட்டர் வரை தண்ணீர் உயர்ந்தது.

“நீண்ட மழை காலங்களில் இந்தப் பகுதி வெள்ளத்திற்கு ஆளாகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

8 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் 1 சிறுவன் ஆகியோர் நள்ளிரவில் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதாகவும்,  இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கைருல் கூறினார்.

 

-fmt