காப்பார் அருகில் விமானம் விபத்துக்குள்ளானது, தேடுதல் மற்றும் மீட்புபணி தொடர்கிறது

இன்று பிற்பகல் கிள்ளான் அருகில் உள்ள காப்பார் பகுதியில் உள்ள செம்பனை தோட்டத்தில் ஒரு சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, பிற்பகல் 1.56 மணியளவில் விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகளுக்கு அழைப்பு வந்ததை அடுத்து மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

பிற்பகல் 2.45 மணி நிலவரப்படி, மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

“அழைப்பைத் தொடர்ந்து, காப்பார் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் குழு ஒன்று காப்பார் , கம்போங் டோக் மூடாவில் உள்ள சம்பவம் நடந்த  இடத்திற்கு அனுப்பப்பட்டது.

“குழுவின் ஆரம்ப அறிக்கையின்படி, அந்த இடத்தில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதை அவர்கள் கண்டறிந்தனர்.

“குழு இன்னும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வருகிறது” என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.