ஆபத்தான போதை மருந்து சட்டத்தை மறுசீரமைத்து, மறுவாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் – ராம்கர்பால்

புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், ஆபத்தான மருந்துகள் சட்டம், 1952 இன் சில பிரிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு தரவுகளை மேற்கோள் காட்டிய ராம்கர்பால், நாட்டின் மொத்த சிறை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் சட்டத்தில்  காட்டப்பட்டுள்ள குற்றங்களுக்காக தடுப்புக் காவலில் உள்ளனர் என்றார்.

“கடந்த ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 75,379 ஆக இருந்தது, இது அதிகபட்ச கொள்ளளவான 69,816 ஐ விட அதிகம்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“இவர்களில் மொத்தம் 23,523 கைதிகள் போதைப்பொருள் பழக்கம் மற்றும் அடிமைத்தனத்திற்காக சட்டத்தின் பிரிவுகள் 12(2), 15(1)(a), மற்றும் 39C ஆகியவற்றின் கீழ் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.”

எனவே, இந்தச் சட்டப் பிரிவுகளை அரசு மறுபரிசீலனை செய்வது விவேகமானதாக இருக்கும் என்றார்.

சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த முன்னாள் துணை அமைச்சரான ராம்கர்பால், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதில் தண்டனை முறைகளின் செயல்திறன் குறித்து உள்துறை அமைச்சகம் ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.

மேலும் சிகிச்சை அடிப்படையிலான மறுவாழ்வு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அடிமைத்தனத்துடன் போராடுபவர்களுக்கு உதவ சுகாதார அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை அவர் வரவேற்றார்.

போதைப்பொருள் பயன்பாட்டாளர்களுக்கும், போதைக்கு அடிமையானவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காகபெங்காசே அமைப்பு   போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் பாராட்டப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று ராம்கர்பால் கூறினார்.

போதைப்பொருள் பயன்படுத்தபவர்களையும் போதைக்கு அடிமையானவர்களையும் சிறையில் அடைப்பதன் மூலம் போதைப்பொருள் பயன்படுத்தபவது மற்றும் போதைப் பழக்கம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது,” என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய இந்த குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நீண்ட கால இலக்குகளுடன் கூடிய கொள்கைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது  என்று அவர் கூறினார்”.

 

 

-fmt