சீன-தமிழ் பள்ளிகள் வேற்றுமையை உருவாக்குகின்றன -விவாதம் செய்ய  அம்னோ டிஏபி தயார்

சீன-தமிழ் பள்ளிகள் வேற்றுமையை உருவாக்குகின்றன – ஒற்றுமைக்கு தேசிய பள்ளியே சிறந்தது என்ற தலைப்பில் விவாதம் செய்ய  அம்னோ டிஏபி தயார்.

அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரனின் அழைப்பை ஏற்று,

“தேதி, இடம், நேரத்தை மட்டும் செட் பண்ணுங்க”, என்றார்.

“நாங்கள் எப்போதும் விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம் ஒற்றை ஸ்ட்ரீம் கல்வி தலைப்பைப் பற்றி பேசுகிறோம். அதை நிறைவேற்றுங்கள்” என்று அக்மல் (மேலே) இன்று முகநூலில் கூறியுள்ளார்.

நேற்று, ராஜீவ், அக்மல் தேசிய ஒருமைப்பாடு குறித்து நம்பிக்கை,  பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்களைக் குறைவாக மதிப்பிட்டு  விவாதங்களைத் தூண்டிவிடக் கூடாது என்றார்.

“வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவர்களை அவமதிப்பது நிச்சயமாக தேசிய ஒற்றுமைக்கான பாதையல்ல”.

“பல தசாப்தங்களாக வெற்றிகரமான பல்லின பன்மொழி கல்வியை தாழ்த்தி வீழ்த்துவதற்கு முன், தேசியப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது இன்று சீன பள்ளிகள் பன்முக தன்மையுடன் திகழ்கிறது என்றார்.

புக்கிட் கேசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன்

அக்மல் மற்றும் பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி ராமசாமி இருவரும் கடந்த வாரம் தாய்மொழிப் பள்ளி பாடம் தொடர்பாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பன்மொழி பள்ளிகளை வலியுறுத்தும் அதே வேளையில், ராமசாமி “பங்சா மலேசியா”வை ஆதரிப்பதன் பின்னணியில் உள்ள தர்க்கத்தை பற்றி அக்மல் கேள்வி எழுப்பினார்.

நீங்கள் குடிபோதையில் இருக்கிறீர்களா அல்லது என்ன?,” என்று ராமசாமியின் கருத்துக்கு பேஸ்புக்கில் பதிலளித்தார் அக்மல்.

செம்மைப்படுத்த அழைப்பு

கடந்த புதன்கிழமை (மார்ச் 6), பள்ளிக்கல்வி முறையை செம்மைப்படுத்த ஒரே ஸ்ட்ரீம் கல்வி முறை அமல்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அரசுக்கு அக்மல் பரிந்துரைத்தார்.

மாணவர்களின்மலாய் மொழி திறனை வலுப்படுத்தும் அதே வேளையில், தேசியவாத அம்சங்களை புகுத்துவதன் மூலம், உள்ளூர் கல்வி முறையின் விரிவான மதிப்பீட்டை உயர்த்த அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கு பதிலளித்த இராமசாமி, இனப் பிளவுகளுக்கு பன் மொழிப் பள்ளிகளைக் குற்றம் சாட்டுவது தவறு என்றும், அதற்குப் பதிலாக அரசியலைக் குற்றம் சாட்டினார் என்றும் அக்மல் கூறினார்.

கடந்த மாதம், சீன -தமிழ்  மொழிப் பள்ளிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும் என்று இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மேல்முறையீட்டை பெடரல் நீதிமன்றம் நிராகரித்தது.,