காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 80 பாலஸ்தீனியர்கள் ஒரே இரவில் கொல்லப்பட்டனர் என்று அனடோலு நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள செய்தி ஊடகத் தகவல்கள், நுசைராத் அகதிகள் முகாம் மற்றும் காசா நகரம் உட்பட காசாப் பகுதியின் பல பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், மக்கள் வீடுகளையும் கட்டிடங்களையும் இலக்கு வைத்த தாக்குதல்களில் பலர் காயமுற்றுள்ளனர் என்றும் கூறுகின்றன.
இஸ்ரேலிய இராணுவம் அல்-ஜலா தெருவில் ஒரு வீட்டின் மீது குண்டு வீசிப் பல குடியிருப்பாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
காசா நகரத்தில் உள்ள அல்-சிஃபா மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தையும் அது இடித்தது. பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்தனர். இதன் விளைவாக டஜன் கணக்கானவர்கள் மடிந்தனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர்.
பாலஸ்தீனத்தின் சிவில் பாதுகாப்பு குழுக்கள் கட்டிடத்தின் இடிபாடுகளிலிருந்து ஐந்து பாலஸ்தீனியர்களின் உடல்களை மீட்டன, அதே நேரத்தில் பிற மீட்பு முயற்சிகள் இன்னும் நடந்து வருகின்றன.
காசா நகரின் அருகில் உள்ள துஃபாவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
காசா அரசாங்கத்தின் ஊடக அலுவலகத்தின் கூற்றுப்படி, நஸ்ர் சுற்றுப்புறத்தில், இஸ்ரேலிய இராணுவம் ஒரு வீட்டின் மீது குண்டு வீசியதில் பலர் கொல்லப்பட்டனர்.
நுசைராத் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டை இராணுவம் குறிவைத்து நடத்திய தாக்குதலில் குறைந்தது 36 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல், குறைந்த பட்சம் 31,490 பாலஸ்தீனியர்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், காசா பகுதியில் கொல்லப்பட்டனர் மற்றும் 73,439 பேர் அத்தியாவசியத் தேவைகளின் பற்றாக்குறையின் மத்தியிலும் காயமுற்றனர்.
பாலஸ்தீனிய குடியிருப்புப் பகுதியில், குறிப்பாக வடக்கு காசா பகுதியில் வசிப்பவர்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர்.