வெளிநாட்டுப் பயணம் நாட்டு நலனுக்காகவே தவிர தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல – அன்வார்

சமீபத்திய ஜெர்மனி பயணம் உட்பட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் நாட்டின் நலனுக்காகவே என்றும் சிலர் கூறுவது போல் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை பிரதமர் துறையின் மாதாந்திர கூட்டத்தில் அன்வார் கூறியபோது,  இதில்  அதிகார துஷ்பிரயோகம், வெளிநாட்டு விடுமுறைக்கு அரசு நிதியை முறைகேடு செய்தல், முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன என்றார்..

“நண்பர்களே, இந்தப் பிரச்சனைகளை எல்லாம் என்னால் தீர்க்க முடியாமல் போகலாம், ஆனால் என்னை நம்புங்கள், ஜெர்மனிக்கு எனது ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நான் ஒரு கடையில் கூட கால் வைக்கவில்லை. விடுதிக்கும், சந்திப்புகளும் இடையில் செல்வதைத் தவிர எனக்கு வேறு நடவடிக்கைகள் இல்லை.”

“முதல் நாள் கூட்டத்தைத் தவறவிட்டு, இரண்டாவது நாள் கோல்ஃப் விளையாடினேன்” என்பதெல்லாம் காலாவதியான நடைமுறைகள்.

எனது நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஓய்வு நேரம் குறைவாக இருந்ததால், நான் ஓய்வெடுக்க சிறிது தூரம் நடந்தேன். அவ்வளவுதான்,” என்றார்.

“இந்தச் செயல்களில் ஏதேனும் தவறு இருப்பதாகக் கருதப்பட்டால், நான் எனது நேர்மையான மன்னிப்பைக் கோருகிறேன்.”

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸ் மற்றும் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் ஆகியோருடனான உத்தியோகபூர்வ சந்திப்புகளைத் தவிர, அன்வார் ஐரோப்பிய அடிப்படையிலான இஸ்லாமிய அறிஞர்களுடன் இஸ்லாமோஃபோபியாவின் சவால்களைப் பற்றி விவாத்தித்தேன்.

சீனா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் போது, பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்புகளில், நாட்டின் பொதுச் சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்துவதை அவர்கள் பாராட்டினர்.

நாம் நமது முயற்சிகளை ஒருமுகப்படுத்தினால், சில ஆண்டுகளில், நம் நாட்டின் கண்ணியத்தை மீட்டெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இலக்கமுறை மாற்றம் மற்றும் ஆற்றல் மாற்றம் ஆகியவற்றில் நாம் பின்தங்கியுள்ளோம், இவை இரண்டும் நமது தேசத்திற்கு முக்கியமான முன்னுரிமைகள், அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதிப்போம். என்று அவர் கூறினார்.

 

 

-fmt