மூடா யாருடன்கூட் டணிஅமைக்கும்?

எதிர்காலத்தில் பக்காத்தான் ஹராப்பான் அல்லது பெரிக்காத்தான் நேஷனல் உட்பட எந்தக் கூட்டணியுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக மூடா கூறியுள்ளது, ஆனால் தற்போது “மூன்றாவது அணியாக” இருக்க விரும்புவதாக கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக கடும் போட்டி நிலவிய போதிலும், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் இப்போது ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் எப்படி கூட்டணி வைத்துள்ளன என்பதை மேற்கோளிட்டு, அரசியல் களம் சுறுசுறுப்பாக உள்ளது என்று மூடா பொதுச்செயலாளர் அமீர் ஹாடி கூறினார்.

முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையது அப்துல் ரஹ்மான் அரசாங்க முகாமை விட்டு வெளியேறிய பிறகு பக்காதானுடனான மூடாவின் கூட்டணி கடந்த செப்டம்பரில் முறிந்த போதிலும், கூட்டணி அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்குத் திரும்பினால், கொளகைகளில் சமரசம் செய்யாமல் இருந்தால், அது மீண்டும் புத்துயிர் பெற முடியும் என்று அமீர் கூறினார்.

பெரிக்காத்தானுக்கும் அதே நிலைப்பாடு தான். ஒரு நாள் அவர்கள் இனம், மதம் என்பதை விட மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த விரும்பினால், அவர்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று, அகாடமி நுசாந்தராவின் அரசியல் ஆய்வாளரான அஸ்மி ஹாசன், கடந்த பொதுத் தேர்தல் மற்றும் ஆகஸ்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள், நீண்டகாலமாக நிறுவப்பட்ட கட்சிகளுடன் போட்டியிடுவது மூடா கடினமாக இருப்பதைக் காட்டுகிறது என்றார்.

கடந்த வாரம், பெரிக்காத்தான் தலைவர் முகைதீன் யாசின், சாலைப் பேரணியில் சையத் சாதிக் கூட்டணியில் சேருவார் என்று கூறினார். பெரிக்காத்தானின் அழைப்பை நிராகரித்தது தவறு என்றார்.

இதை மறுத்த மூடா, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மூன்றாவது அணியாக செயல்படும்’ என்று தெரிவித்தது.

 

 

-fmt