நோன்பு திறக்கும்போது நண்பரின் ஆரஞ்சு பழச்சாறு குடித்ததால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்

நேற்று ஷாலாம் பிரிவு 36 இல் உள்ள தொழிற்சாலை தொழிலாளர் விடுதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது இக்பால் இப்ராஹிம் கூறுகையில், பாதிக்கப்பட்ட 49 வயதான நபர் நோன்பு திறக்கும்போது தனது ஆரஞ்சு சாற்றைக் குடித்ததால் சந்தேக நபர் கோபமடைந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

“51 வயதான சந்தேக நபர் ஒரு பொது தொழிலாளியான பாதிக்கப்பட்டவரைப் பல முறை சமையலறை கத்தியைப் பயன்படுத்தி குத்தினார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரவு 7.20 மணியளவில் இந்தச் சம்பவம்குறித்து போலிசாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், 10 நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்தில் சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் இக்பால் கூறினார்.

“சம்பவத்தில் சந்தேக நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் கூறினார்.

இக்பால், சந்தேகநபருக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவுக்கான விண்ணப்பம் இன்று செய்யப்படும் என்றும், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவ, வழக்குபற்றிய தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி Md Anuar Md Amilah@Harun ஐ 019-225 5597 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.