Padu பதிவு 7.7 மில்லியனாக உயர்ந்துள்ளது – ரபிசி

The Central Database Hub (Padu) கடந்த வாரத்தில் பதிவுகளில் அதிகமான உயர்வைக் கண்டுள்ளது என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

மார்ச் 24 இரவு 11.59 மணி நிலவரப்படி, மார்ச் 17 அன்று பதிவு செய்யப்பட்ட 5.4 மில்லியனிலிருந்து 7.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இன்றுவரை, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பதிவுதாரர்கள் 35.1% எட்டியுள்ளனர்.

“இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும், மார்ச் 31 காலக்கெடுவிற்குள் 50% எட்டலாம் அல்லது அதைத் தாண்டும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்,” என்று ரபிஸி (மேலே) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடைசி நிமிடம்வரை பதிவு செய்வதை விட்டு விட வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“காலக்கெடு நெருங்கி வருவதால், தினசரி பதிவுகள் தொடர்ந்து கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். உதவி மற்றும் மானியங்களைப் பெறுவதிலிருந்து விலக்கப்படும் அபாயத்தைத் தவிர்க்க, மார்ச் 31, 2024க்கு முன் உங்கள் தரவைப் பதிவுசெய்து புதுப்பிக்கவும்,” என்று அவர் கூறினார்.