கலந்தாலோசிக்காமல் அவசரமாகத் தயாரிக்கப்பட்ட போலிஸ் சார்புடைய சட்ட திருத்தங்களை நிறைவேற்ற வேண்டாம் என்று சமூக அமைப்புகள் செனட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இச்சட்டத்தின் பல திருத்தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான கதவுகளைத் திறந்து விடுகின்றன என்று தன்னார்வ குழுக்கள் சாடுகின்றன.
” அரசாங்கத்திடம் இருந்து வெளிப்படைத்தன்மை இல்லாததால், போலிஸ் சட்டம் (திருத்தம்) 2024 மசோதாவை ஒத்திவைக்க செனட் உறுப்பினர்களை நாங்கள் அழைக்கிறோம்.
“சார்புடைய குழுக்களைச் சந்தித்து மசோதாவை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வரவேற்க அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று இந்தக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுவாரா ரக்யாட் மலேசியா, அங்காதன் பெலியா இஸ்லாம் மலேசியா மற்றும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா ஆகியவை இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
RM200 முதல் RM10,000 வரையிலான அபராதம் மற்றும் மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைக் காலம் வரை காவல்துறையின் உத்தரவுகளைத் தடுப்பதற்கான அபராதங்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டதை குழுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
“ ஒரு போலிஸ் உத்தரவு நியாயமானதா என்பதை ஒரு போலீஸ் அதிகாரி எவ்வாறு தீர்மானிப்பது போன்ற கேள்விகள் எழுகின்றன?
“தற்போதுள்ள காவல்துறையை கண்காணிக்கும் வழிமுறைகள் பயனற்றவையாக இருப்பதால், இந்தத் திருத்தம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலுக்கு வழி வகுக்கும்.”
“இது ‘அதிகாரத்தை கொண்டு மக்களை ஒடுக்கும் நிலைமைக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்,” என்று கூட்டணி கூறியது.
சாலைத்தடுப்புகளில் போலீஸ் சிக்னல்களை கடைபிடிக்கத் தவறினால், போராட்டங்களில் ஈடுபடும் மக்களுக்கு எப்படிப் பொருந்தும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அது கூறியது.
“பொது மக்கள் தொடர்பான கொள்கைகள் அல்லது சட்டங்களில் திருத்தங்களை உருவாக்கும் போது, அரசாங்கமும் உள்துறை அமைச்சகமும் மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
“இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் செயல்பாட்டு முறை முந்தைய நிர்வாகங்களின் பிரதிபலிப்பைக் கண்டு நாங்கள் ஏமாற்றமடைகிறோம்.
“இது ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கு முரணானது, இது மடானி அரசாங்கத்தால் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது,” என்று அது கூறியது.