எதிர்வரும் திங்கள்கிழமை அன்வார் இப்ராகிம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டால், கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் பாஸ்சின் முன்னாள் உதவித் தலைவர் ஹசான் அலி.
வயது ஒரு கூறாக இருக்குமானால், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தேர்வாகலாம். இருவரும் திறமையான வேட்பாளர்கள்.
“எனக்கு ஆலோசனை கூறும் அதிகாரம் இருந்தால், நான் அவ்விருவரையும் நாட்டை வழிநடத்திச் செல்வதற்கு ஏற்ற தலைவர்கள் என்று பெயர் குறிப்பிடுவேன்”, என்றாரவர்.