சுங்காய் பெசாட் 2 தம்பஹான் தோட்டப் பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளானது.
பேராக் காவல்துறைத் தலைவர் முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரியை தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
“ஆம், அது ஒரு பயிற்சி விமானம் மற்றும் பயணிகள் உயிர் பிழைத்தனர்,” என்று அவர் கூறினார்.
காலை 9.55 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தபோது விமானத்தில் இரண்டு பயணிகள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருந்ததாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட இருவரும் ஸ்லிம் ரிவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், விமானத்தின் வகையை இப்போது தீர்மானிக்க முடியாது என்று அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வாட்ஸ் அப்மூலம் பரவி வருகிறது.