காஜாங்கில் ஒரு பெண் கடத்தப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவி வந்த வீடியோ தொடர்பில் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். குறித்த வீடியோவில் ஒரு பெண்ணைக் கார் ஒன்றில் இழுத்துச் செல்வது போல் காட்டப்பட்டுள்ளது.
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரான் அப்துல் யூசுப் கூறுகையில், “இந்தச் சம்பவத்துக்குத் தொடர்பான எந்தப் புகாரும் நாங்கள் பெறவில்லை. மேலும், சில சாட்சிகள் இது கணவன்-மனைவிக்கிடையேயான குடும்ப பிரச்சனையெனத் தெரிவித்துள்ளனர்,” எனக் குறிப்பிட்டார்.
அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கார் உரிமையாளரைக் கண்டறிந்து விசாரித்து வருவதாகவும், இது கடத்தல் சம்பவம் அல்ல என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தவறான தகவல்களைப் பரப்பிப் பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்