சைபூல்:தீர்ப்பை ஏற்கிறேன்,ஆனாலும்……

சைபூல் புகாரி அஸ்லான், குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறார் ஆனாலும் அன்வார் இப்ராகிம் மீது சுமத்திய குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதைக் கோடி காட்டியுள்ளார்.

டிவிட்டரில் சுருக்கமாக ஒரு பதிவை இட்டிருந்த சைபூல் ,“Tidak didunia, namun di Masyar PASTI”(இவ்வுலகில் நீதி கிடைக்காவிட்டாலும் அவ்வுலகில் கிடைப்பது உறுதி) என்று குறிப்பிட்டிருந்தார்.

உயர்நீதிமன்றம் அன்வாரை விடுவித்த சுமார் ஒரு மணி நேரத்தில் இந்த டிவிட்டர் பதிவு காணப்பட்டது.

 “Akan terus tenang, doa istiqamah & sabar. Illahi Antal Maksudi Wa Ridhoka Mathlubi.(அமைதி காத்து இறைவழிபாட்டில் ஈடுபடுவேன், பொறுமையாக இருப்பேன்)’ என்றவர் குறிப்பிட்டிருந்தார்.

சைபூல், தீர்ப்பைக் கேட்பதற்கு இன்று நீதிமன்றம் வரவில்லை.